விஜய் பிரசாத்’ காயத்ரி ரெமோ” சார்லி” இவர்கள் நடிப்பில் ஐயப்பன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை ஆரம்பத்தில் ஒரு இன்ஸ்பெக்டரும் அந்த ஊரில் வசிக்கும் இளைஞரும் மலையேறி ஊருக்கு செல்கிறார்கள் அப்பொழுது சாரலியின் கதையை சொல்கிறார் அந்த இளைஞர்
வீடு கட்டுவதற்காக கூட்டுறவு சங்கத்தில் 4 லட்சம் கடன் வாங்கி அந்த கடனுக்குவட்டி கட்ட முடியாமல் அசலும் கட்ட முடியாமல் அவர் தூக்கில் தொங்குகிறார் அதற்குள் எழுத்தறிவு இல்லாத அவர் கைநாட்டு வைத்து கலங்கும் போது அவரது மகன் அவருக்கு படிப்பு சொல்லித் தருகிறார்
சார்லி அப்படி படிக்க ஆரம்பிக்கும் முதல் கடிதமே சார்லி வீட்டை ஜப்தி செய்ய வந்திருக்கும் நோட்டீஸ் அதை படித்த பிறகு சார்லி இறந்து விடுகிறார் இது ஒரு கதை
: இன்னொரு புறம் நாயகன் விஜய் பிரசாத், காட்டில் மரம் ஏறி தேன் எடுத்து பிழைப்பு நடத்துகிறார் இவரது மனைவி காயத்ரி இவர்கள் இருவருக்கும் பல வருடங்களாக குழந்தை இல்லை இதனால் ஊரில் எந்த நல்லது கெட்டது எ என்றாலும் இவர்கள் இருவரையும் விளக்கி வைத்து விடுகிறார்கள் இதனால் விஜய் பிரசாத் மனம் உடைந்து போகிறார்: அப்படி ஒரு தடவை காட்டில் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு குழந்தை கிடைக்கிறது அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் காண்பித்து அந்த குழந்தைக்கு மணி என்று பெயர் வைத்து இருவரும் காப்பாற்றுகிறார்கள்
அந்த குழந்தை பெரிதாகி விபரம் தெரிந்த பிறகு அந்த குழந்தைக்கு வில் வித்தையில் ஆர்வம் விஜய் பிரசாத் மணிகண்டனை வில்வித்தை பயிற்சயாளரிடம் கொண்டு சேர்க்கிறார் வில்வத்தை பயிற்சியாளர் இப்பொழுது எல்லாம் கோர்ஸ் முடிந்துவிட்டது ஆறு மாதம் கழித்து வரச் சொல்கிறார்
: மணிகண்டனோ முடிந்தால் என்ன நான் ஓரமாக நின்று வில்வித்தையை கற்றுக் கொள்கிறேன் என்று எடுபுடி வேலை செய்து சாதனை யாராக மாறுகிறார்
: இன்னொரு புறம் காட்டை அழித்து காட்டில் வாழும் மிருகங்களை கொன்று காட்டில் மரங்களை கொன்று காட்டுக்கு தீமையை உண்டு பண்ணும் வில்லன் கும்பல் நான்கு பேர் விஜய் பிரசாத்திடம் மோதுகிறார்கள் அதன்பிறகு அந்த மெயின் கும்பலின் தலைவனுடன் விஜய் பிரசாத் மோதுகிறார் விஜய் பிரசாதத்தை ஒழித்தே தீருவேன் என்று இந்த காட்டை அழிக்கும் கும்பலும் இந்த கும்பலை ஒலித்தே தீருவேன் என்று விஜய் பிரசாத்தும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்
அப்பொழுது ஊருக்குள் புலி வந்து விடுகிறது அந்த புலியினால் ஊர் மக்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள் அப்பொழுது சபரிமலைக்கு மாலை போட்டு விஜய் பிரசாத்” ஊர் மக்களும் ஐயப்ப மலைக்கு போக நினைக்கிறார்கள் அப்படி போக நினைத்தவர்கள் ஐயப்பன் மலைக்கு போனார்களா? அங்கு ஊருக்குள் வந்த புலி அவர்களை போக விட்டதா? வில்லன் கும்பல் விஜய் பிரசாத் என்ன செய்தார்! விஜய் பிரசாத் அந்த கும்பலை அழித்தாரா? காட்டில் அனாதையாக கிடந்த அந்த குழந்தை மணிகண்டன் யார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது ரூபன்!
சார்லியின் குழந்தை என்ன ஆனார் என்பது போன்ற கேள்விகளும் இதில் அடங்கும்
[: படத்தில் பின்னணி இசை பாடல்கள் அற்புதமாக இருக்கிறது
குழந்தை மணி ஐயப்பனாக நடித்திருக்கிறார் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் விஜய் பிரசாத் ஆக்சன் காட்சிகளில் வெழுத்து வாங்கி இருக்கிறார் எமோஷனல் சென்டிமென்ட் காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்
விஜய் பிரசாத் மனைவியாக வரும் காயத்ரி ரெமோ’ அசல் கிராமத்து பெண்ணாக காட்டுக்குள் இருக்கும் ஒரு எளிமையான குடும்ப தலைவன் மனைவியாக அற்புதமாக நடித்திருக்கிறார்
: சார்லி எழுத படிக்கத் தெரியாதவராக கடன் வாங்கிவிட்டு திருதிரூவென விழிக்கும் மாமுல் ரகம் அதே தழுதழுத்த குறள் அதே அழுகை ஜப்தியை கண்டு கலங்கும் ரகம்
: இன்ஸ்பெக்டர் வருபவர் பாரஸ்ட் ஆபிஸராக வருபவர்கள் ஊருக்குள் பெரியவர்களாக வருபவர்கள் அனைவரும் நடிப்பு நன்றாக இருக்கிறது ஸ்டாலின் மகனாக நடித்த குழந்தை நடிப்பு நன்றாக இருக்கிறது
கவிஞர்களின் பாடல் வரிகள் அற்புதமாக இருக்கிறதுபடத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு தான் அந்த காட்டையும் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களையும் அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
கிளைமாக்ஸ் காட்சியில் கோரத்தாண்டவம் ஆடி நாயகன் ஆடும் பொழுது ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது
அந்த பாடலும் நடனமும்
இயக்கம் ஐயப்பன் ஒரு பக்தி படத்தை சமூக சிந்தனையோடு காந்தாரா “அனுமன்” போன்ற படங்களின் சாயலோடு படத்தை இயக்கி இருக்கிறார் அற்புதமாக இருக்கிறது படம் நிச்சயம் எல்லோரையும் கவரும்.
ஐயப்பனின் பக்தியை உணர்பவர்கள் நிச்சயம் தரிசனம் செய்வார்கள் ரூபன் எந்த வகையிலும் உங்களை இரண்டு மணி நேரம் ஏமாற்றது கலகலப்பாக விறுவிறுப்பாக புதுமையாக சென்றிருக்கிறது
திரை க்கதை
நிச்சயம் நீங்கள் இந்த படத்தை கண்டு களிக்கலாம் உங்களுக்குள் ஒரு புதிய மாற்றத்தை புதிய சிந்தனையை புதிய பக்தியை ஐயப்பனின் புதிய உத்தரதாண்டவத்தை இந்த படம் எடுத்துச் சொல்லும்
ரூபன் வெற்றி பட்டியலில்….
