மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு . மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசமான அரசியல் காதல் களம்
வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கேபிள் டிவி நடத்தி கொண்டு இருக்கும் எம் ஜி ஆர் பாண்டி எப்படி அரசியல் சாணக்கியன் ஆகிறார்? எதிர் கட்சியை சேர்ந்த ராமசந்திரன் மகளான தமிழ் செல்வி யை எப்படி காதலித்து திருமணம் செய்கிறார்? என்பதையும் தன்மீது விழும் கொலைகாரன் என்ற பட்டத்தை எப்படி துடைக்கிறார்? என்பதை சொல்லும் உயிர் தமிழுக்கு. மீண்டும்அமைதி படை படத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இப்படம். கதை என்னவென்று பார்க்கலாம் வாங்க அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அமீர் கொலை குற்றம் சாட்டப்படுகிறார் அவரின் கட்சி தலைமை அவரைஅழைத்து, விவரம் கேட்கிறது அப்போது ராஜ்கபூர் அமீரின் ஃபிளாஷ் பேக் ஆக விவரிக்கிறார் நடந்தது என்ன?
. கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் (அமீர்), தமிழ் செல்வி (சாந்தினி) மீது ஏற்படும் காதலால் அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஹீரோயின் சாந்தினி, முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். இடைவேளைக்கு பிறகு இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தால் நீ சொல்வதைக் கேட்கிறேன் என்று அமீரிடம் சவால் விடுகிறார் அந்த சவாலில் இவர் வெற்றி பெற்றாரா?
என்பதை படம் கலகலப்பாக கலர் ஃபுல்லாக சொல்கிறது கிராமத்து கதையும் சென்னை கதையும் அடுத்தடுத்து வருகிறது இரண்டும் காதல் கதை தான்
அமீரை சிறைக்கு கூட்டிப் போகும்போது அந்த கேரவனில் நடக்கும் சண்டைக்காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது அத்தனை போலீஸ்காரர்கள் இருந்தும் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது
ஒரு ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை இப்படி பட்ட பகலில் எதிரிகள் தாக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது
இந்தப் படத்தில் நிறைய பிளஸ் இருக்கிறது இதுவரை வந்த அரசியல் படங்களில் காதல் காட்சிகள் இந்த அளவுக்கு இருந்ததில்லை இதில் ரசிக்க வண்ணம் உள்ளன
படத்தின்
பிளஸ் சமகால அரசியலை கிண்டல் செய்திருப்பது தான். சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது, மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. அமீருக்கு இந்த வேடம் நன்றாக பொருந்தி இருக்கிறது
அமீரின் நடிப்பு. வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரிலும் அசத்தி இருந்தார் . அதேபோல உயிர் தமிழுக்கு, படத்திலும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் .
கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், உயிர் தமிழுக்கு என்ற அழகாக பேசி அசால்டாக நடித்திருக்கிறார் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினியின் பெயர் தமிழ்ச்செல்வி.
அழகான முகம் நல்ல வரவு. அரசியல் ஆட்டத்தில் நிறைய காதல் கதைகளை பார்த்திருப்போம்.. ஆனால் இந்த படம் காதலுக்காக செய்யப்பட்ட அரசியல். இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, அமீருடன் படம் முழுவதும் வருகிறார் டைமிங் காமெடி வருகிறார் ரசிக்க வைக்கிறது ராஜ்கபூர், அமீரின் கட்சித் தலைவராக வந்து நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவர் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது ஆனந்தராஜ், மகளின் காதலை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிக்காரனுக்கு எப்படி என் மகளை கொடுப்பேன் என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து கொள்கிறார் சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமீர் எல்லாமே பார்த்துக் கொள்கிறார் படம் முழுக்க காட்சிக்கு காட்சி அமீர் வந்து அலப்பறைகள் செய்கிறார் மொத்தத்தில் இந்த உயிர் தமிழுக்கு தரமான அரசியல் படமாகவும் காதல் காட்சிகள் கொண்ட கலகலப்பான படமாகவும்,தரமான ஒளி பதிவு , பின்னணி இசை, மிரட்டல் ஆகவும் வந்திருக்கிறது படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு ,கலர் கரெக்ஷன், டி ஐ, போன்ற டெக்னிக்கலாகவும் நன்றாக இருக்கிறது சண்டை காட்சிகள் ரசிக்கும் வண்ணம் விறுவிறுப்பாக இருக்கிறது எம் ஜி ஆர் பாண்டியாக, நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ,என்ற பாடலில் நன்றாக நடித்தி ருக்கிறார் அமீர். எஸ் பி பி யின் குரலில் பாடலும் ரசிக்க வைத்திருக்கிறது அதேபோல ஓட்டு கேட்க என்ற பாடலும் இன்றைய நாட்டு நடப்பை சொல்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் வாக்கு எண்ணிக்கைகள் மாறி மாறி வருவதும் நாயகி முதலில் ஜெயிப்பது போல் காட்டிவிட்டு பிறகு அமீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ரசிக்க வைத்திருக்கிறது மொத்தத்தில் இந்த சோசியல் மெஸேஜ் உள்ள உயிர் தமிழுக்கு படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும். இயக்குனர் ஆதம்பாவா தெளிவான திரைக்கதை, குழப்பம் இல்லாத நேர்கோட்டில் பயணிக்க வைத்து, படத்தை வெற்றி படமாக்கி இருக்கிறார்
