மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு ,
இப்படத்தில், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசமான அரசியல் காதல் களம்
வித்தியாசாகர், இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கேபிள் டிவி நடத்தி கொண்டு இருக்கும் எம் ஜி ஆர் பாண்டி, எப்படி அரசியல் சாணக்கியன் ஆகிறார்?
எதிர் கட்சியை சேர்ந்த ஆனந்த் ராஜ் மகளான தமிழ் செல்வி யை எப்படி காதலித்து திருமணம் செய்கிறார்? என்பதையும், தன்மீது விழும் கொலைகாரன் என்ற பட்டத்தை எப்படி துடைக்கிறார்? என்பதை சொல்லும் உயிர் தமிழுக்கு.”திரை ப்படம்
மீண்டும்அமைதி படை படத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
கதை என்னவென்று பார்க்கலாம் வாங்க…
சென்னையில்
அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினி ஸ்ரீதரனை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது
அவரின் கட்சி தலைமை அவரைஅழைத்து, விவரம் கேட்கிறது அப்போது ராஜ்கபூர் அமீரின் அரசியல் என்ட்ரி எப்படி நடந்தது என்பதை விளக்குகிறார்.
. கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் (அமீர்), தமிழ் செல்வி (சாந்தினி ஸ்ரீதரன்) மீது ஏற்படும் காதலால் அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன் அழகாக இருக்கிறார் அருமையாக நடித்துள்ளார்.
இடைவேளைக்கு பிறகு அவர் அமீரிடம் இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தால் நீ சொல்வதைக் கேட்கிறேன் என்று சவால் விடுகிறார் அமீரும் அந்த சவாலை ஏற்று கொள்ள, சவாலில் வெற்றி பெற்றது யார்? என்பது சுவராஸ்யமான திரை க்கதை
படம் கலகலப்பாக, கலர் ஃபுல்லாக, இருக்கிறது கிராமத்து கதையும் சென்னை கதையும் அடுத்தடுத்து வருகிறது.
இரண்டும் காதல் கதை தான்
இந்தப் படத்தில் நிறைய பிளஸ் இருக்கிறது இதுவரை வந்த அரசியல் படங்களில் காதல் காட்சிகள் இந்த அளவுக்கு இருந்ததில்லை இதில் திகட்ட திகட்ட காதல் காட்சி ரசிக்க வண்ணம் உள்ளன.
படம் முழுக்க
சமகால அரசியலை கிண்டல் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது
சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது, மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
அமீருக்கு எம் ஜி ஆர் பாண்டி வேடம் நன்றாக பொருந்தி இருக்கிறது
அவர் இதற்கு முன் . வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரிலும் அசத்தி இருந்தார் . அதேபோல உயிர் தமிழுக்கு, படத்திலும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் .
கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், உயிர் தமிழுக்கு என்ற அழகாக பேசி அசால்ட்டாக நடித்திருக்கிறார்.
படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினி ஸ்ரீதரனின் பெயர் தமிழ்ச்செல்வி.
அழகான முகம் நல்ல வரவு. அவர் பார்வை ஒன்றே போதுமே ஆளைகாலிசெய்து விடும் ..
. இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, அமீருடன் படம் முழுவதும் வருகிறார் அவரின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது
ராஜ்கபூர், நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விடாமல் அவர் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது
ஆனந்தராஜ், மகளின் காதலை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிக்காரனுக்கு எப்படி என் மகளை கொடுப்பேன்
என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து கொள்கிறார்
மகள் மீது பாசம் அரசியல் போட்ட சோறு என்று தவிக்கிறார்
சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
அவர்கள் எல்லோரும் தங்கள் பங்குக்கு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
. காட்சிக்கு காட்சி அமீர் வந்து அலப்பறைகள் செய்கிறார்
காதலியை அடைந்தே தீருவேன் என்று
மொத்தத்தில் இந்த உயிர் தமிழுக்கு, தரமான அரசியல் படமாகவும், காதல் காட்சிகள் கொண்ட கலகலப்பான படமாகவும் வந்து உள்ளது
,தரமான ஒளிப்பதிவு வித்யா சாகரின், பின்னணி இசை, மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்
படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு ,கலர் கரெக்ஷன், டி ஐ, போன்ற டெக்னிக்கல் குழு நன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள்
கந்து வட்டி காரனிடம் தாலியை மீட்க போராடும் அந்த ஏழை ப்பெண் மணியை காப்பாற்ற அமீர் எம் ஜி ஆர் போல வந்து சன்டை போடும், காட்சி யிலும்,
கைது செய்யப்பட்டு கொண்டு போகும் போது வரும் சன்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது .
எம் ஜி ஆர் பாண்டியாக அமீர், நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு , என்று பாடி ஆடி நடிக்கும் அந்த பாடலில் நன்றாக நடித்தி ருக்கிறார் . எஸ் பி பி யின் குரலில் பாடலும் ரசிக்க வைத்திருக்கிறது
அவரது கடைசி பாடல் இது என்று எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது.
அதேபோல ஓட்டு கேட்க, என்ற பாடலும் இன்றைய நாட்டு நடப்பை சொல்கிறது
கிளைமாக்ஸ் காட்சியில், வாக்கு எண்ணிக்கைகள் மாறி மாறி வருவதும்,
நாயகி முதலில் ஜெயிப்பது போல் காட்டிவிட்டு, பிறகு அமீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ரசிக்க வைத்திருக்கிறது
மொத்தத்தில் இந்த உயிர் தமிழுக்கு, படம்
கல கல ப்பான காமெடியுடன், கருத்தாழமிக்க வசனங்களுடன் வெற்றி படமாக வந்துள்ளது.
.இயக்குனர் ஆதம்பாவா தெளிவான திரைக்கதை யுடன்,
நாட்டுக்கு இன்று தேவையான படத்தை கொடுத்திருக்கிறார்
எல்லோரையும் கவரும் இந்த” உயிர் தமிழுக்கு”
