கதை களம்
செய்யாத தவறுக்காக ஓடி ஒளியும் (ரஜினி) விஜய் சத்யா (ராதிகா) ஷெரின் இவர்கள் மகள் நிலா சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா?
நடந்தது என்ன வாங்க பார்க்கலாம் தில் ராஜா’ இப்படத்தில் விஜய் சத்யாவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருக்கிறார். காமெடி வேடத்தில் ‘கே.பி.ஒய்’ பாலா நடித்திருக்கிறார்.மற்றும் இயக்குனர் ஏ . வெங்கடேஷ் வனிதா நடித்துள்ளனர் அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்
ரஜினி ரசிகனாக வருபவர் விஜய் சத்யா. இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார் இவரது மனைவி ஷெரின், இவரது ஒரே மகள் நிலாவின் பிறந்தநாளை கொண்டாட ஷாப்பிங் செல்கிறார்கள்
சென்று விட்டு வரும் வழியில் அமைச்சர் (ஈஸ்வரபாண்டியன்) அதாவது ஏ வெங்கடேசன் மகன் ஆதி ஷெரினை பார்த்து காம போதையில் காரை துரத்திக் கொண்டு வருகிறார் அவர்களுடன் மூன்று கூட்டாளிகள் இவர்கள் நாலு பேரிடம் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்தியா காரை வேகமாக ஓட்டி வருகிறார் அமைச்சர் மகன் என்று திமிரில் காரை வழிமறித்து அவர்களிடம் பிரச்னை செய்கிறார் ஆதி அங்கு வந்த கவுன்சிலர் தட்டிக் கேட்க, அவரை துப்பாக்கியால் சுட்டு விடுகிறான் ஆதி, அதன் பிறகு மீண்டும் தப்பிக்கிறார் விஜய் சத்யா காரில் வேகமாக பின்னாலே துரத்தி வந்து ஒரு காட்டுப் பகுதியில் இவர்களை மடக்க அங்கு நடக்கும் யுத்தத்தில் சில விபரீதங்கள் நடக்கிறது. இந்த வளையத்துக்குள் விஜய் சத்யாவும், ஷெரின், மாட்டிக் கொள்கிறார்கள்
அது என்ன? என்ன நடந்தது? அமைச்சர் ஈஸ்வரர் பாண்டியனின் மகன் ஆதி எப்படி கொல்லப்பட்டார் ? என்பதை இந்த குற்றத்தை கண்டுபிடிக்க வரும் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி ஜானகி, கண்டுபிடித்தாரா? மகனை இழந்த அமைச்சர் ஈஸ்வர பாண்டியன் தன் மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடித்து அவர்களை பழி வாங்கினாரா? விஜய் சத்யா செய்யாத குற்றத்திலிருந்து தப்பித்தாரா? என்பதை பரபரப்போடு விறுவிறுப்போடு சொல்லி இருக்கும் படம் தான் “தில் “ராஜா
நாயகன் விஜய் சத்யா
காதல், ஆக்ஷன், கமர்ஷியல் உள்ளிட்ட அனைத்து ஜானர்களுக்கும் ஏற்ற ஹீரோவாக களம் இறங்கிஆக்ஷன் காட்சியில் மட்டுமல்ல, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் நாயகன் விஜய் சத்யா
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் இளம் நடிகர் விஜய் சத்யா. சிக்ஸ் பே க்ஸ் உடம்பு, கம்பீரமான பார்வை, அசத்தலான ஆ க்ஷன் , செண்டிமெண்ட் காட்சியில் உருக்கம், என எல்லா வகையிலும் முதல் படத்தில் ஸ்கோர் செய்துள்ளார் வாழ்த்துக்கள் விஜய் சத்யா.
ரஜினி ரசிகராக வந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அபிமானம் பெற்று இருக்கிறார்
இனி அடுத்தடுத்த படங்கள்ல ஆக்சன் அவதாரம் எடுக்கும் நாயகனாக நிச்சயம் வருவார் என்பதை நம்பலாம்.
சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் ஆனால்
பார்த்த உடனே பிடித்துப் போகும் அளவுக்கு இருக்கும் விஜய் சத்யா, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக கடந்த சில வருடங்களாக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தது வீண் போகவில்லை. தனது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கதை, மற்றும் இயக்குநருக்காக, காத்திருந்த நிலையில், அவருடைய காத்திருப்புக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது. ஆம், சரத்குமார், அர்ஜுன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல கமர்ஷியல் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கண்ணில் பட்டு விஜய் சத்யா, ஆக்ஷன் திரில்லர் படத்தில் அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார்.இனி அவருக்கு ஏறு முகம் தான்.

நாயகி ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தில் கவர்ச்சியை காட்டு என்று காட்டி நடித்திருந்த நடிகை செரீனா இது என்று கேட்கும் அளவிற்கு கொஞ்சம் உடம்பில் சதை போட்டிருந்தாலும், கவர்ச்சி காட்சிகளில் , பாடல் காட்சிகளில் வஞ்சம் இல்லாமல் அள்ளித் தெளித்திருக்கிறார் விஜய் சத்யாவுடன் ரொமான்ஸ் காட்சியை அந்த கடற்கரை காட்சியில் அம்சமாக பொருந்தி போகிறார். ஒரு அம்மாவாக படத்தில் வந்தாலும், இளமை குறையாமல் மவுசு காட்டி இருக்கிறார்
இயக்குனர் மற்றும் நடிகர் ஏ.வெங்கடேஷ
அங்காடித்தெரு படத்தில் வில்லனாக மிரட்டிய இயக்குனர் ஏ .வெங்கடேஷ் இந்த படத்தில் திரைக்கதை எழுதி படத்தை இயக்கி அமைச்சர் ஈஸ்வர பாண்டியனாக மிரட்டி இருக்கிறார்.
தன்னுடைய மகனை இழந்து வாடும் ஒரு தந்தை என்ன மனநிலையில் இருப்பாரோ
தன் மகனுக்கு நேர்ந்தது என்ன என எண்ணி களங்கும் ஒரு பாசத் தந்தையின் பரிதவிப்பை அருமையாக உணர்ந்து நடித்திருக்கிறார்
படத்தில் இயக்கமும் சீராக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்
அவரது அனுபவம் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது
” தில் ராஜா “படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள்
கதாநாயகன் – விஜய் சத்யா
கதாநாயகியாக ஷெரின்
மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல். ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்
டெக்னீசியன் குழு
அம்ரீஷ் இசையில் ஓபனிங் பாடல் ரொமான்ஸ் பாடலும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
பாடல்களை- நெல்லை ஜெயந்தன், மற்றும் கலை குமார் எழுதி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் .
மனோ V.நாராயணா ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது காட்டுக்குள் நடக்கும் அந்த சண்டை காட்சிகளும் ,விஜய் சத்யா வீடு, மற்றும் அமைச்சரின் வீடு, என எல்லா இடத்திலும் ஒளிப்பதிவு புகுந்து விளையாடி இருக்கிறது
– ஆண்டனி பீட்டர் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் அம்சமாக இருக்கிறது முதல் பாடலுக்கு போட்ட அரங்க அமைப்பு அமைச்சரின் வீடு நாயகனின் மெக்கானிக் கார் செட் என எல்லா இடங்களிலும் ஆர்ட் வண்ணம் மிளிர்கிறது
செந்தாமரை அவர்கள் நடன பயிற்சி கொடுத்திருக்கிறார் ஓப்பனிங் பாடல் அம்ரீஷ் மற்றும் நாயகன் சத்யா இவர்கள் நடனம் நன்றாக வந்திருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்கள் துரத்தும் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மாக்ஸ் போட்டுக்கொண்டு நடனமாடும் காட்சிகள் ஆகட்டும் கடற்கரை ஓரத்தில் நாயகன் நாயகி ஆடும் ரொமான்ஸ் பாடலிலும் நடனம் பயிற்சியாளரின் பங்கு நன்றாக தெரிகிறது
சுரேஷ் அர்ஷ் படத்தொகுப்பு கச்சிதமாக பணிபுரிந்துள்ளார் ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதி வரை படத்தொகுப்பு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் எந்த காட்சியிலும் படம் லேக்காகாமல் கொண்டு சென்று இருப்பது படத்தொகுப்பாளரின் திறமை
சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சிகளை வியக்கும் வண்ணம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடம்பில் சட்டையை கிழித்துக்கொண்டு எதிரிகளிடம் மோதும் சண்டை காட்சி ஆகட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒவ்வொருவராக வந்து விஜய் சத்யாவை தாக்கும் போது அதன் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது நிஞ்ஜா வாக வரும் அந்த நாய் கூட நன்றாக நடத்தி ருக்கிறது
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல், புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண், மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு நிறுவனம் : கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio )
தயாரிப்பாளர் – கோவை பாலசுப்பிரமணியம்*.
*மொத்தத்தில் இந்த தில் ராஜா “தில்லானா , ராஜா தான் தமிழ் சினிமாவுக்கு ஒரு வலிமையான அழகான நாயகன் கிடைத்திருக்கிறார் நல்ல விறுவிறுப்பான கதைக்களம் அதை சொன்ன விதத்தில் இயக்குனரும் நாயகனும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்
