வெஞ் சன்ஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

அறிமுக இயக்குனர் ராகுல் அசோக் இயக்கத்தில் , ஏசி புரொடக்சன் தயாரித்து இருக்கும் படம்”வெஞ்சன்ஸ்” இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

கதை களம்

2042 ம் ஆண்டு தாய் நாடு வேனி மாவட்டத்தில் , நடிகை சச்சுவுக்கு உடனிருந்து பார்ப்பதற்கு வருகிறார் சாம் அவரிடம் யார்? இந்த வேனி என்று கேட்கிறார். அதற்கு பிறகு சச்சு வேனியை பற்றி சொல்வது தான் கதை

யார் அந்த வேணி? ஏன் ஊரெல்லாம் வேனியை பற்றியே பேசுகிறது? அப்படி என்ன அவர் சாதித்து விட்டார்? ஜாதியாக மதமாக பிரித்து வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அழுக்கான அரசியல்வாதிகளுக்கு, அவர் எப்படி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்!!!

ஒரு தனி மனுஷி சமூக சீர்திருத்தத்தை எப்படி கையில் எடுத்து சாட்டையாக விலாசினார்.

வேணியின் புத்திசாலித்தனம் மதியூகம், எதிரிகளை எப்படி திக்கு முக்காட வைத்தது!!!

என்பதை “வேணி “என்ற கதாபாத்திரத்தின் மூலம், புத்திசாலித்தனமான கதாபாத்திரமாக வடிவமைத்து, நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

வாழ்த்துக்கள் இயக்குனரே சமீபகால படங்களில் ஒரு வித்தியாசமான அரசியல் விவரம் கொண்ட படத்தை சொன்னதற்காக நன்றியும் பாராட்டுக்களும் மக்கள் சமகால அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை படமாக இல்லை பாடமாக தந்திருக்கிறீர்கள்.

1985 ல் காவேரி மாவட்டத்தில் காளி வெங்கட், மகளாக படித்து வருகிறார் வேணி. இவர் பொதுத்தேர்வில் 500க்கு 484 மதிப்பெண் வாங்கி முதலிடம் பிடிக்கிறார். எல்லோரும் இவரை கைதட்டி பாராட்டுகிறார்கள். அந்த புகழ் போதையில் ,எனக்கு கைதட்டலும் இந்த பாராட்டும் வேண்டும் என்கிறார். அப்பொழுது “காளி வெங்கட்”வாய் தவறி நான் உன் அப்பா இல்லை என்கிறார். அப்படி என்றால் என் அப்பா யார்? என்று கேட்க,1970களில் வாழ்ந்த வேணியின் தந்தை மெய்யப்பன் பற்றி சொல்கிறார் காளி வெங்கட், அதன் பிறகு காளி வெங்கட்டையே காலி செய்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

ஆசிரமத்தில் தங்கி படித்து ,2002ல்ஐ.ஏ.எஸ் ஆக அதே ஊருக்கு வருகிறார் .வந்த பிறகு, இவரின் புத்திசாலித்தனம், “தப்பு செய்ய கூடாது அப்படி செய்தாலும் அதை சரியா செய்யணும் “என்று அரசியல்வாதிகளுக்கு ,பாடம் எடுத்து புது வாழ்க்கை முறையை கற்றுத் தருகிறார்.

அவர் ஐ.ஏ.எஸ் ஆன பிறகு ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ செந்தில், மற்றும் முதல்வர் வேலு, இன்னொரு அமைச்சர் பாலாஜி, டெல்லியில் இருந்து வரும் மாதவ் , எதிர்க்கட்சித் தலைவர் திருப்பதி, போன்றவர்களின் நேரடி எதிரியாக மோதுகிறார் .
பள்ளியில் மனைவியின் கையைப் பிடித்து இழுக்கும் ஆசிரியர் சாமிநாதன், ஜாதி மதத்தை தூண்டும் கூல் சக்கரவர்த்தி போன்றவர்களின் கொட்டத்தை அடக்குகிறார். தன்னுடன் படித்த சக மாணவனான ராம் பார்!! வேண்டும் என்று கேட்க, அவனுக்கு செக் வைக்கிறார். இப்படி ஒவ்வொரு காயாக நகர்த்தி, எப்படி உச்சத்தை தொடுகிறார். அதற்கு என்ன விலை கொடுக்கிறார்? அரசியல் எதிரிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்? அவரின் புத்திசாலித்தனம் என்ன? என்பதை அவ்வளவு அற்புதமாக சொல்லி இருக்கிறது. இந்த படம்.
ஒவ்வொரு அத்தியாமாக இந்த படம் வருகிறது .

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேணியாக, அபர்நிதி ஆடும் சதுரங்க ஆட்டம் அவ்வளவு ரசிக்க வைக்கிறது. அந்த புத்திசாலித்தனம் அற்புதமாக இருக்கிறது.

நடிகர்கள் & நடிகைகள்

வேணி, என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “அபர் நிதி அற்புதமாக நடித்திருக்கிறார்.

அவர் அரசியல்வாதிகளுக்கு ,காட்டும் ஆட்டம். அவர்கள் முன் சவால் விட்டு ஜெயித்துக் காட்டுவது ,என்று புத்திசாலித்தனமான அந்த காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது .

ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பது, தவறு செய்த அரசியல்வாதிகளின் பயோடேட்டா எடுத்து அவர்களுக்கு செக் வைப்பது, முதலமைச்சருக்கு சவால் விடுவது, டெல்லி அமைச்சர் மாதவ்க்கு ,சவால் விடுவது, தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சாகர் உடன், கிளைமாக்ஸில் கைகோர்ப்பது, என்று அவர் நடிப்பில் ஜொலித்திருக்கிறார் தன்னை தாக்க வரும் பொழுது, எதிரிகளை வீழ்த்தும் லாவகம் , கல்வி தனியார் வசம் இருந்து, அரசு ஏற்று நடத்தும் யூகம் , ஒவ்வொரு யுத்தத்தையும் வேணி எதிர்கொண்டு, அரசியல் எதிரிகளை வீழ்த்தும் தந்திரம் , தன்னுடைய பெயர் நிலைத்திருக்க வேண்டும். என்று புகழ் போதையில் அவர் நகர்த்தும் காய், வெற்றிக்காக ஒவ்வொரு வியூகமாக வகுக்கும் தந்திரம் என, அபர்நிதி நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார் கண்களில் இருக்கும் அந்த வெற்றியின் வெறி, சின்ன புன்னகையின் மூலம் எதிரிகளை வீழ்த்தி விட துடிக்கும் அந்த வசீகரம்.

தன் பி.ஏ செல்வி பதட்டப்படும் போதெல்லாம் கூல் கூல் என்று அவரை அமைதிப்படுத்தி காயை நகர்த்துவது வேகமாக ஜொலிக்கிறது அவர் நடிப்பு.

டெல்லி அமைச்சராக வரும் ஜான் விஜய், சூது களத்தில் வேணிக்கு எதிராக அவர் செய்யும் சூழ்ச்சி ரசிக்க வைக்கிறது. வேணி உயிரோடவே இருக்க கூடாது என்று அவர் ஆடும் ஆட்டம் வெறி கொண்ட ஆட்டம்.

முதல்வர் வேலுவாக நடித்து இருக்கும் இளவரசு, வேணியிடம் மாட்டிக் கொண்டு சிக்கி திணறும் காட்சிகள் அருமையாக நடிப்பில் ஜொலிக்கிறார்

எதிர்க்கட்சித் தலைவர் திருப்பதியாக லிவிங்ஸ்டன், காமெடியில் கலை கட்டுகிறது சாகர் என்னும் கேபிள் சங்கரிடம் ஐடியா கேட்டு வேணிக்கு எதிராக அவர் காய் நகர்த்தி மாட்டிக் கொண்டு வெளிப்படுகிறது. ஸ்கோர் செய்திருக்கிறார்

மெய்ப்பனாக வேணியின் தந்தையாக, ஒய் ஜி மகேந்திரன். மதக் கலவரத்தை தூண்டி குளிர் காயும் சுரேஷ் சக்ரவர்த்தி.

வக்கர புத்தி கொண்ட ஆசிரியராக சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் ஆதவன் .

வேணியின் பி ஏ செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நடிப்பு சூப்பர்.

வேனியின் வளர்ப்பு தந்தையாக வரும் காளி வெங்கட் . இவர்கள் எல்லோருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது பாலாஜி ஆக வரும் சரவண சுப்பையா, சாகர் என்ற கதாபாத்திரத்தில் வரும் கேபிள் சங்கர், என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ராகுல் அசோக் சதுரங்க வேட்டை படத்துக்கு பிறகு ,ஒரு விறுவிறுப்பான அரசியல் களம் தனிமனஷி வேணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இன்று நாட்டுக்கு சொல்லி இருக்கும் இயக்குனர் நிறைய யோசித்து இருக்கிறார். நிறைய சிந்தித்திருக்கிறார்.

சமகால அரசியலை பேசும் பொழுது யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.

ஆனால் அதே சமயம் அமைச்சர்கள் செந்தில், பாலாஜி, வேலு, என்ற பெயர்கள் மூலம் சில குறியீடுகளை தந்திருக்கிறார்.

காளி வெங்கட் பேசும் வசனமான “பொம்பள பிள்ளைக்கு படிப்பு ரொம்ப முக்கியம்” என்ற அந்த வசனத்தின் மூலம் கல்வியின் தரம் பெண்களின் படிப்பு பெரியார் சொன்னாங்க கருத்தை காட்சிப்படுத்திருப்பது கைதட்டி வரவேற்க சொல்லுகிறது.

வேணியை தாக்க வரும்பொழுது, வேணி எதிர் கொண்டு எதிரிகளை இதன் மூலம் ஆக்குவது எல்லாம் இயக்குனரின் சிறப்பான யோசனை காட்சிப்படுத்தி இருக்கிறார் திரைக்கதை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது தமிழ்நாடு, தாய் நாடு என்று மாற்றிய புத்திசாலித்தனம் சிறப்பாக இருக்கிறது. எதிர்காலம் இயக்குனருக்கு பிரகாசமாக இருக்கிறது.

இசை கார்த்திக் ராஜா ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஏ.ஜி.ஆர் பாடல்கள் எழுதி இருக்கிறார் சுகின் தமிழ் நிதி, தயாரிப்பாளர் ஏ .பி அசோக்குமார் ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு வின் ஒளிப்பதிவு அருமை படத்தொகுப்பு இம்ரான் சிறப்பாக செதுக்கி இருக்கிறார். வைரபாலன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.

நடன பயிற்சி கலைமாமணி ஸ்ரீதர் ஒரு பாட்டுக்கு வந்து சிறப்பாக ஆடி விட்டு போகிறார். சண்டை பயிற்சி டேஞ்சர் மணி சண்டைக் காட்சி அருமை

காஸ்ட்யூம் டிசைனர் சுபிகா, ஒப்பனையாளர் சசி, ஆடை வடிவமைப்பாளர் சுகுமார்,

VFX Head & Supervisor’s: Fazil Mohamad
DI: Pixel Light Studio
Colorist: Ranga
Sound Design: Arun S Mani

என இப்படத்தின் வெற்றிக்கு இரவு பகலாக உழைத்து இருக்கிறது
இந்த டீம், இவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் .

மொத்தத்தில் இன்று நடக்கும் அரசியல், சூது , ஏமாற்றி மக்களை எப்படி சுரண்டுகிறார்கள். எப்படி கமிஷன் போகிறது. நேர்மையான அதிகாரி எப்படி பந்தாடப்படுகிறார். மக்கள் எப்படி ஏமாளியாக இருக்கிறார்கள். என்பதை பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறது.
இந்த படைப்பு. பாராட்ட வேண்டிய படைப்பு .தேர்தல் சமயத்தில் இந்த படம் வந்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. நிச்சயம் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்பது உறுதி.

வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் 🌷