கொலை சேவல்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

ஆர் .பி .பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் பி பாலா – கவுசல்யா பாலா தயாரித்துள்ள இப்படம், சமூக அக்கறை உடன் தயாரிக்க பட்டுள்ளது தயாரிப்பாளர், மற்றும், இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

கதை களம்

பழமையான, கோவிலில் நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் கதையான இப்படம் ஒரு தமிழ் நாட்டுப்புற திரில்லர், திரைக்கதை, கொண்ட படம் .விறுவிறுப்பான கதைக்களம்.

ஆரம்பத்தில் கலையரசன் ,,அவரது மனைவி தீபா, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் நிறைசூலி, கோயிலில் சேவல் படையலிட்டு, வழிபட்டால் குழந்தை நன்றாக பிறக்கும் .என்ற ஐதீகத்துடன் கலையரசனின் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அவர் அக்கா ,அக்கா கணவர் , மற்றும் இரண்டு குழந்தைகள் என எல்லோரும் டிராக்டரில் செல்ல, கலையரசனும், அவரது மனைவியும், டூவீலரில் டாக்டரிடம் சென்று விட்டு, கோயிலுக்கு செல்கிறார்கள்.

இவர் களோடு ,,பால சரவணன், அவரது நண்பரும் அங்கு வருகிறார்கள்.

அப்படி அவர்கள் வீட்டிலிருந்து கோயிலுக்கு வரும் வரை படம் பார்ப்பவர்களுக்கு திக், திக் ,என்று ஒரு பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் திரைக்கதை ,

வீட்டை விட்டு கிளம்பும்போது விளக்கு அணையும் சகுனம் ஏற்படுகிறது.

அதன் பிறகு கலையரசனுடன் தீபா, வண்டியில் செல்லும் பொழுது மயக்கம் வந்து, அது ஒரு தடை.,

கோயில் அருகே நாயகி, தண்ணீரில் கால் வைக்கும் பொழுது ஒரு அதிர்வலை ஏற்பட்டு அங்கு ஒரு தடை ஏற்படுகிறது .

நாயகி வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று நாயகனை அழைக்கும் பொழுது நாயகன் கலையரசன், நாயகியை சமாதானப்படுத்தி கோயிலுக்குள் அழைத்து வருகிறார்.

நாயகி தீபா, இதற்கு முன் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று குழப்பத்தில் இருக்கிறார்.

கஜராஜ் ,அவரது மகனும், டிவிஎஸ் வண்டியில் வரும் பொழுது பெட்ரோல் தீர்ந்து ஒரு குரூரமான இறுக்கமான முகத்தில் வருகிறார்
கஜராஜ் அது ஏன்? என்பது சஸ்பென்ஸ் !!!

அடுத்து ஆதவ் கும்பல் காட்டுக்குள் குடித்துவிட்டு ,சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அது என்ன?? என்பது சஸ்பென்ஸ்!!
இப்படி இடைவேளை வரை சஸ்பென்சாக கொண்டு சென்று இடைவேளைக்கு பிறகு, கலையரசன், தீபா, காதலை சொல்லி, கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவத்தை அரங்கேற்றி நெஞ்சை பதற வைத்திருக்கிறார் இயக்குனர் துதி வானன்.
சமீப கால படங்களில் இந்த அளவுக்கு ஒரு டென்ஷனையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி திரைக்கதையில் ஒரு டெம்போ டெம்ப்ளேட்டை உருவாக்கி, திரைக்கதையில் உச்சம் தொட்டது என்று சொல்லலாம். இயக்குனர் கதை ,சொன்ன விதம் ,திரைக்கதை எல்லாமே நன்றாக இருக்கிறது. அந்த சேவல் என்ன ஆகும்? என்ற பதட்டம் முடிவு வரை தொற்றிக் கொள்கிறது.
மிரட்டி இருக்கிறார் இயக்குனர். மிரள வைத்தது படம்.

நடிகர் &நடிகைகள்
கலையரசன்

காளி, என்ற வேடத்தில் சிங்கப்பூரில் வேலை செய்து அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சொந்த கிராமத்துக்கே திரும்பி வந்து பிறகு நாயகியை சந்தித்து அம்மாவாக நினைத்து ,,நாயகி தீபாவுடன் பேசி, ஆறுதல் அடையும் காட்சிகள் எமோஷனல் மிகுந்தது . இருவரும் காதலிக்கும் காட்சிகள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது.

கிளைமாக்ஸ் காட்சியில் காளியின், கதாபாத்திரமும் அங்கு நேரும் சம்பவங்களும், படத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது கலையரசன் நடிப்பு. அவ்வளவு அருமையாக இருக்கிறது சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகி தீபா பாலு

அனுசுயா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறார். நிறை மாத கற்பினியாக, வயிற்றை தள்ளிக்கொண்டு மெதுவாக அடியெடுத்து, மெதுவாக பேசி, கலையரசனின் அன்பை பெற்று அவர் காதலிக்கும் காட்சிகள் அவ்வளவு ரம்யமாக இருக்கிறது. தீபா பாலுக்கு நிச்சயம் இந்த படம் விருதுகளை பெற்று தரும் என்பது உறுதி.

பால சரவணன், குமார் என்ற கதாபாத்திரத்தில் கலையரசன் நண்பனாக வந்து, கலகலப்பு ஊட்டுகிறார்.

கஜராஜ் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது .இதை பற்றி விவரிக்காமல் இருப்பது சிறப்பு .

மற்றும் தாத்தா, பாட்டியாக நடித்திருப்பவர்கள். நடிப்பு நன்றாக இருக்கிறது.
மற்றும். ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ,ராஜா மணி, தனலட்சுமி ,கயல், மணிமேகலை போன்ற துணை கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் வில்லனாக ஆதவ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் அகரன் நடிப்பு நன்றாக இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

வி.ஆர். துதிவாணன் இயக்கி இருக்கிறார்
கிராமத்து மண்வாசம் ,ஒரு நீண்ட பயணம். ஒரு பழைய கோயில், அதன் பின்னணியில் 200 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம். அதை இந்த நிகழ்காலத்துக்கு தொடர்பு படுத்தி, ஒரு அற்புதமான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
தெளிவான மெல்லிய நீரோடை போல, திரைக்கதை விரிகிறது.
நாயகன், நாயகி, காதலை சொன்ன விதமும் ரசிக்க வைக்கிறது.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மனதை பதற வைக்கிறது.
இயக்குனர் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறினாலும் மனிதர்கள் மனம் இன்னும் கல்லாக இருக்கிறது மனிதம் இன்னும் காணவில்லை!! என்பதை இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு சந்தன் இசையமைத்துள்ளார் .
பின்னணி இசை, மிகப் பிரமாதம் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவம் நடக்கப்போகிறது என்பதை இசையின் மூலமே உணர்த்தி இருக்கிறார் உயிரோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் இசை, அதன் பின்னணி பலம் சேர்த்திருக்கிறது.

பி .ஜி . முத்தையா வின் ஓளிப்பதிவு
ஜவ்வாது மலைப்பகுதி ,கீழே கரடு முரடான பாதை, கோவிலுக்கு செல்லும் அந்த வழி, பசுமையான மரம், காதலன் காதலி காதலிக்கும் பொழுது அந்த பசுமையான வயல் காடு, என்று அழகான ஓவியமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். கிளைமாக்ஸ் காட்சியில் நெஞ்சம் பதறும் வண்ணம் படப்பிடிப்பு நடத்தி நம்மை திகைப்புக்கும் உண்டாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அஜய் மனோஜ்
படத்தொகுப்பாளராக சிறப்பான பணியை செய்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் திகிலாக, படத்தொகுப்பு அற்புதமாக கச்சிதமாக செதுக்கி இருக்கிறது.

ஒப்பனை பாண்டியன்.
டேஞ்சர் மணியின்
கிளைமாக்ஸ் சண்டை காட்சி பயங்கரமாகவும் தெறிக்க விட்டிருக்கிறார்.
சரவணா அபிராமன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். அந்த பழைய கோயில், இளையராஜா ஓவியம், என ஆர்ட் டைரக்டர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார் .
பாடல்களை விக்கி எழுதி இருக்கிறார்.
செண்பக ராஜ், சார்முகியும் பாடலை பாடியிருக்கிறார்கள்
ஆடை வடிவமைப்பு பலராமன்
எல்லோருக்கும் கச்சிதமாக இருக்கிறது.
கலையரசன் லுங்கி அணிந்து கொண்டிருப்பது. மிகவும் எதார்த்தம் இயல்பாக இருந்தது

DI : Sri Kalasa Studios
Colorist : Raghuraman
Audiography : Karthick Suresh
Sound Design : Karthick Dhamodharan
VFX : Vija
Publicity Designer : Sindhu Grafix
Costume Designer : Kasthuri Irani
Stills : Manivannan

என இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த கொலை சேவல்”
மனிதர்களின் மனதில் மூடி இருக்கும் இருள் எப்போது விலகும் எப்போது இந்த உலகம் திருந்தும் என்ற கேள்வியை முன் வைக்கிறது!!! விடை கிடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்.

வெற்றி பட்டியலில் “கொலை சேவல்”

படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்க கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🧶🌷