எக்கோ – விமர்சனம்

இயக்குனர் நவின் கணேஷ் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர் எம் ஏ எம் பி எல் பட்டம் பெற்றவர் 2015 ல் சுழ்வினை என்ற குறும்படத்தை இயக்கினார் அந்த தாக்கமே இந்த எக்கோ திரைப்படம் இவரது இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஆஷிஸ் வித்யார்த்தி, வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எக்கோ”.

கதை என்ன சொல்லுது வாங்க பார்க்கலாம்

ஸ்ரீகாந்த் – பூஜா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனது மாமனாரின் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஸ்ரீகாந்த். ஆனால் ஸ்ரீகாந்த் நோக்கமே வேறு அவர் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறார் அது பிளாஸ்பேக்கில் தெரிகிறது
.
இரவு நேரத்தில், ஸ்ரீகாந்தின் கனவில் மட்டுமல்லாமல் நினைவிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் தொந்தரவு செய்கிறது..

தூக்கம் தொலைத்து நிம்மதி தொலைத்து தவித்த ஸ்ரீகாந்த், அமானுஷ்யத்தை துரத்தும் நபராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தியை நாடுகிறார்..

இதற்குமுன், என்ன நடந்தது என ஆஷிஷ் கேட்க, தன்னுடைய முதல் மனைவியான வித்யா பிரதீப்பை பற்றி கூறுகிறார் ஸ்ரீகாந்த்.

சில திடுக்கிடும் தகவல்களை அவரிடம் கூறுகிறார் ஸ்ரீகாந்த். கதை ப்ளாஷ் பேக் காட்சிகளாக செல்கிறது. அந்த பிளாஷ்பேக் காட்சிகள் தான் படத்தின் உயிர்நாடி அங்கு என்ன நடந்தது என்பதை கேட்கும் பொழுது ஆதஷ்க்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை தருகிறது

அதன்பிறகு என்ன நடந்தது…? அந்த அமானுஷ்யம் யார்.?? அது அமானுஷ்யம் தானா.??? உண்மையிலேயே இந்த உலகத்தில் பேய் பூதம் பில்லி சூனியம் இருக்கிறதா இருந்தால் அது கயவர்களை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறது என்பதையும் சொல்கிறது இந்த படம் படத்தின் முடிவில் நீ தான் வெல்லும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் படத்தின் கேமரா குணம் அற்புதமாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் கேமரா வைத்திருப்பது படத்தில் இருக்கிறது நான்கு பாடல்கள் நான்கும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது பேய் வரும் காட்சிகளில் பயமுறுத்தல் நன்றாகவே கை கொடுத்துள்ளது

கொடுத்த கேரக்டரை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இருந்தாலும் ஆங்காங்கே சற்று நடிப்பது போன்ற உணர்வை கொடுத்ததை தவிர்த்திருந்திருக்கலாம்.

குடும்ப பெண்ணாக ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து காட்சிகளுக்கு அழகு சேர்த்திருந்தார் வித்யா பிரதீப்…அவர் வரும் காட்சிகள் அவ்வளவு அழகு பயந்த சுபாவமும் வெகுளியான எதார்த்தமான கிராமத்து பெண்ணாகவும் நன்றாகவே நடிந்திருக்கிறார்

பாடல் மற்றும் காதல் காட்சிகளில் மிளிர்கிறார் பூஜா…கவர்ச்சி காட்சிக்கு இவர் தாராளம் காட்டுகிறார் ஏராளம் அவ்ளோ பெரிய கம்பெனியின் முதலாளியின் மகளாக வரும் இவர் எப்படி இப்படி சிக்கினார் நாயகனின் சூழ்ச்சி தெரியாமல் போனது எப்படி? இது கொஞ்சம் லாஜிக்இடிக்கிறது பேய் படம் என்றாலே சுந்தர் சி ராகவா லாரன்ஸ் சந்தானம் போன்றவர்கள் பேயை கலாய்த்து காமெடியாக படம் எடுத்து கல்லா கட்டியவர்கள் ஆனால் இந்த இயக்குனரோ பேய்படம் மூலம் ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று இந்த படம் எடுத்திருக்கிறார் ரசிகர்கள் பேயை வைத்து காமெடி செய்வது விரும்புவார்கள் என்பதை சில படங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறது இப்படி பயத்தைக் காட்டி பயமுறுத்தும் படங்கள் ஏதோ ஒன்று தான் ஜெயித்திருக்கிறது அதுக்கும் சரியான கண்டெண்ட் இருக்க வேண்டும். இந்த பேய் பழி வாங்குவது நியாயம் தான் என்று ரசிகர்கள் என்ன வேண்டும் அப்படி இருந்தால்தான் படத்திற்கு வெற்றி கிடைக்கும்

இருந்தாலும் சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டுச் சென்றதற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறலாம்.. மொத்தத்தில் இந்த எக்கோ திரைப்படம் இயக்குனரின் கடுமையான உழைப்பு நடிகர்களின் பங்களிப்பு இசையமைப்பாளரின் இனிமையான மெலோடி ஒளிப்பதிவாளரின் திறமையான ஒளிப்பதிவு கட்சிதமான படத்தொகுப்பு என எல்லாம் கலந்த கலவையாக வெளிவந்துள்ளது எக்கோ உங்களை மிரட்டும் புது அனுபவத்தை கொடுக்கும் தைரியமாக பார்க்கலாம்