செம்மரம் ஆந்திராவில் தமிழர்கள் மட்டும்தான் வெட்டுகிறார்களா தெலுங்கர்கள் வெட்டுவது இல்லையா ஏன் அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை
வறுமையில் வாடும் திருவண்ணாமலை மாவட்டத்து மக்கள் வாழ வழி இன்றி விவசாயம் செய்ய நீரின்றி பசியோடு வாழ்வதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா அவர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்க தவறு ஏதாவது இந்த ஆளும் அரசுகள் அதனால் தான் அவர்கள் செம்மரம் வெட்ட போகிறார்களா
அப்படி வறுமையில் வாடும் கிராமத்து பெண்கள் விபச்சாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்களா அதனால் தான் ஆண்கள் இந்த அவமானத்தை விட செம்மரம் வெட்டி சாவதே மேல் என்று செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் போகிறார்களா
தமிழகத்தில் ஏமாற்றி கூட்டிக் கொண்டு போய் திருப்பதி காட்டில் மரம் வெட்ட வைக்கும் அந்த பாஸ்கர் கதாபாத்திரம் தமிழராக காட்டியது ஏன் ஒரு ஆந்திரா காரணமாக தெலுங்கனாக காட்டி இருக்கலாமே என்ற கேள்விக்கு இயக்குனரின் பதில் திருப்பதியிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர் திருப்பதியைச் சேர்ந்த தமிழர் என்கிறார் இது உண்மைதானா
என்ற கேள்விக்கு நேர்மையான நியாயமான தரமான படத்தோடு பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்
புஷ்பா படத்தில் வரும் சமந்தா பாடலான ஊ சொல்றியா மாமா என்ற கிளாமரான பாடலை வைத்து காசு பார்த்திருக்கலாம் இயக்குனர் அதில் உடன்பாடு இல்லை என்கிறார் எனவே குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ரெட் சாண்டல் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க
2015-ல் செம்மரம் வெட்டியதாக சொல்லி ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘RED SANDAL WOOD’.
இந்தப் படத்தை J.N.சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கே.ஜி.எப்.ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் , சைதன்யா, விஜி, அபி, கர்ணன், ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, இசை – சாம் CS, பாடல்கள் – யுகபாரதி, சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி, எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின், சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், வசனம் – சி.முருகேஷ் பாபு, தயாரிப்பு – J.பார்த்தசாரதி, கதை, திரைக்கதை, இயக்கம் – குரு ராமானுஜம்.
இந்தப்படத்தின் கதை என்ன
“ 2015-ம் ஆண்டில் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப் பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப் பகுதியில் ஆந்திர வனத் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார். அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார் வெற்றி.
அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராதபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
கடத்தல்காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள்..? என்கவுண்டர் செய்ய சொன்னது யார்..? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக் கூடிய செம்மரம் வெட்டும் குற்றத்திற்காக மனித உரிமையை காலில் போட்டு மிதித்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி..?
இதில் பிரபாவிற்கும், கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பதை உண்மைக்கும், மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை…” படம் பார்க்கும்போது அப்பாவி தமிழர்கள் வறுமையை காட்டி எப்படி சிக்க வைக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
இதன் படப்பிடிப்பு ரேணிகுண்டா, தலக்கோணம், தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றுள்ளது
இத்திரைப்பபடம் வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீசுப்புலக்ஷ்மி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் K.ரவி வெளியிடுகிறார்.
ஒரு நல்ல படம் தரமான படைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக இந்த படம் இருக்கிறது எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது
வெற்றி அந்த படத்தில் ஆக்சன் காட்சிகளை அசத்துகிறார் அவர் ஆந்திரா செல்லும்போது காவல் நிலையம் சென்று என்ட்ரி பாஸ் கொடுத்து விட்டு போவது சபாஷ் போட வைக்கிறது அதே போல வெள்ளை நிறம் சண்டை போடுவதற்கான நியாயமான காரணத்தையும் படத்தை சொல்லி இருக்கிறார் அவர் குத்து சண்டை வீரர் என்பதை காட்டி அவ்ளோ பெரிய வில்லனோடு மோதுகிறார் என்பதை நியாயப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
காதல் காட்சிகள் காமெடி காட்சிகள் இப்படி எதுவுமே இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று உள்ளார் கணேஷ் வெங்கட்ராமின் போலீஸ்கதாபாத்திரம் கடைசியில் தமிழர்களுக்கு உதவுவது போல் காட்டி இருப்பது சிறப்பு
ஒளிப்பதிவாளர் காட்டுக்குள் படப்பிடிப்பு என்ற உடன் தன் கேமரா கண்களுக்கு அற்புதமான குளிர்ச்சியான திகிலான இருவருப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்
இசையமைப்பாளர் சாம் சி எஸ் கடைசி சோக பாடல் கடவுளே கடவுளே என்ற பாடல் மூலம் கனத்த சோகத்தை நிரப்பி விடுகிறார் அதே போல பின்னணி இசை மிரட்டி இருக்கிறார்
படத்தொகுப்பாளர் ஜவ்வாக இருக்காமல் இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை விறுவிறுப்பாக முடித்து இருப்பது சிறப்பு
ஆந்திரா அரசாங்கம் ஆந்திர முதல்வர் உட்பட வனத்துறை அதிகாரிகள் உட்பட வனத்துறை அமைச்சர் உட்பட போலீசார் உட்பட எல்லோருமே தமிழர்கள் மீது வஞ்சம் கொண்டு சுட்டுக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக சொல்கிறது இந்த படம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்த படம் தமிழ் சினிமா காண வேண்டிய கொண்டாட வேண்டிய படம் கிராமத்து மக்கள் இந்த படத்தை எல்லாம் பார்த்த பிறகு இனிமேல் செம்மரம் வெட்ட போகக்கூடாது என்று முடிவு எடுத்தால் அது சிறப்பாக இருக்கும் அதே போல தமிழக அரசும் அந்த மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமைச்சர் அதிகாரி இவர்கள் மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த மக்களுக்கு வாழ வசதி ஏற்படுத்தி இது போன்ற என்கவுண்டர்கள் இனி நடக்காத அளவுக்கு அரசு தடுக்க வேண்டும் என்பதும் இப்படத்தின் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையாகும் எனவே ஒரு சினிமா சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அது இந்த படத்தை சொல்லலாம் அப்பாவி தமிழர்கள் இனியும் உயிரை பலி கொடுக்காமல் வறுமையாக இருந்தாலும் சரி சொந்த ஊரோடு மக்களோடு மண்வாசத்தோடு வாழ வேண்டும் என்பது ரெட் சாண்டல் படத்தின் மூலம் கிடைத்த ஒரு விழிப்புணர்வு இயக்குனர் குரு ராமானுஜத்திற்கு சல்யூட் தமிழராக வாழ்வோம் தன்மானத்தோடு வாழ்வோம் அடுத்த மாநிலத்தில் போலீஸ்காரனின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகாமல் வாழ்வோ
